ஈழத்துத் சமையலின் சிறப்பு உணவுகளில் ஒன்று. ஈழத்து இலக்கியங்கள் பல இவ்வுணவு பற்றி சிறப்பாக எடுத்துரைகின்றன. கூழை ஊரார், உறவினர்கள், நண்பர்கள் கூடிச் சமைத்து உண்பர். இதனை ஏழைகள் தொடக்கம் செல்வந்தர் வரை விரும்பி உண்பர். கூழ் சத்துணவு மிக்கது.
கடலுவணவுகள்
- நண்டு - 2 இறாத்தல்/4 நண்டுகள்
- மீன் (கலவாய் மீன் சிறந்தது, அல்லது முள்ளுக் குறைந்த பெரிய மீன்கள்) - 5 இறாத்தல் முழு மீன்
- மட்டிச் சதை- 1 இறாத்தல்
- இறால் - 1.5 இறாத்தல்
மரக்கறிகள்
- பயற்றங்காய் - ஒரு பிடி
- பிலாக்கொட்டை - 0.5 இறாத்தல்
- பூசனிக்காய் - 1 இறாத்தல்
- மரவெள்ளிக்கிழங்கு - 1 இறாத்தல்
- முருங்கை இல்லை - ஒரு பிடி
- தேங்காய்ச் சொட்டு - பாதி
தானியங்கள்/ஒடியல் மா
- ஒடியல் மா - 1 இறாத்தல் (முக்கியமானது)
- முழு உழுந்து (ஒரு சிறங்கை)
- அரிசி (ஒரு சிறங்கை)
சுவைப்பொருட்கள்
- உப்பு - 2.5 மே.க (தேவைக்கு ஏற்ப)
- புளி - 100/150 கிறாம்
- மஞ்சள் - 1 தே.க
- மிளகு - 25 கிறாம்
- சின்னசீரகம் - 1 தே.க
- செத்தல் மிளகாய் - 25
- உள்ளி - 2 முழுப் பூண்டுகள்
செய்முறை
முதலில் மீன், நண்டு, இறால், மட்டி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டித் துப்பரவு செய்து கழிவுக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் 1 லீட்டர் தண்ணீர் விட்டு கடலுணவுகளையும் உழுந்தையும் அரிசியையும் மஞ்சளையும் சேர்ந்து அவியவிடவும். மரக்கறிகளையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கழிவிக் கொள்ளவும். ஒரு கொதி கண்ட பின்பு முருங்கை இலை தவிர்த்த பிற மரக்கறிகளைச் சேர்க்கவும்.
பிறதொரு பாத்திரத்தில் புளியை அரை லீட்டர் தண்ணீருடன் கரைத்து கொட்டையை அகற்றவும். வடித்த புளித் தண்ணீருக்குள் ஒடியல் மாவைச் சேர்த்து ஊறவிடவும். மிளகாய், மிளகு, சிறுசீரகம், உள்ளி ஆகியவற்றை அரைத்து ஒடியல் மாவுடன் கலக்கவும்.
கடலுணவுகள், மரக்கறிகள் வெந்தவுடன் சுவைப்பொருட்கள் கூட்டுக் கலந்த ஒடியல் மாவை அவற்றுடன் கலக்கவும். முருங்கை இலையையும் சேர்க்கவும். கலந்தபின் ஐந்தில் இருந்து பத்து நிமிடங்கள் அளவில் அடுப்பை நூக்கவும். சுவைக் கேற்ப உப்பை கலந்துவிடவும்.
உண்ணும் முறை
கூழ் அனைவரும் கூடி உண்ணும் ஓர் உணவு. பலா இலையில் அல்லது பனை இலையால் செய்யப்பட்ட பிளாவில் இதனை கூடி அமர்ந்திருந்து குடிப்பர். குடிக்கும் போது இடைக் கிடையே தேங்காய்க் சொட்டை கடித்துக் கொள்வர். நண்டு மீன் போன்றவற்றின் சக்கைகளை போடுவதற்கு சிறு பாத்திரங்களையும் பக்கத்தில் வைத்துக் கொள்வர்.
நன்றி: http://ta.wikibooks.org
0 comments:
Post a Comment